Paristamil Navigation Paristamil advert login

நண்பியை திருமணம் செய்த அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்..!

நண்பியை திருமணம் செய்த அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்..!

18 பங்குனி 2024 திங்கள் 05:16 | பார்வைகள் : 7137


அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தனது நீண்டகாலதோழியை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பெனிவொங். சோபி அல்லோச்சசுடன் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த ஒருபால் இனத்தவர்கள் திருமணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

அடிலெய்ட் ஹில்ஸ் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வில் பிரதமர் அன்டனி அல்பெனிஸ் உட்பட தொழில்கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் இது குறித்த தகவல்களை பதிவிட்டுள்ள பெனிவொங், இந்த விசேடமான நாளை எங்களின் பல நண்பர்கள் குடும்பத்தவர்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கை துணையுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட படத்தையும் பெனிவொங் வெளியிட்டுள்ளார்.

பெனிவொங் 2007 இல் தனது வாழ்க்கை துணையை சந்தித்தார்.

அதேசமயம் இவர்களிற்கு இரு பெண்பிள்ளைகள் உள்ளனர். 

இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விடயங்களை மிகவும் இரகசியமாக பேணிவருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்