88 சதவீத வாக்குகளுடன் வெற்றி விளாடிமிர் புடின்
18 பங்குனி 2024 திங்கள் 05:20 | பார்வைகள் : 3947
ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் விளாடிமிர் புடின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக முதல் அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.
வருகிற மே மாதம் 7 ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனாபதியின் பதவிக் காலமும் அப்போது 4 ஆண்டுகளாக இருந்த நிலையில், அது புடின் பிரதமராக இருந்த போது 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது.
அதேவேளை புடின் சாகும் வரை ரஷ்யாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே இந்த சட்டத்தைக் கொண்டு வந்ததாக அப்போதே, பலரும் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.