La Courneuve காவல்நிலையம் மீது தாக்குதல்! - ஆறு பேர் கைது!!
18 பங்குனி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 13586
நேற்று மார்ச் 17 ஆம் திகதி இரவு La Courneuve காவல்நிலையம் மீது தாக்குதல் இடம்பெற்றது.
இரவு 11 மணிக்குப் பின்னர், காவல்நிலையம் முன்பு குவிந்த இளைஞர்கள் பலர், காவல்நிலையம் மீது மோட்டார் பட்டாசுகளை வீசினர். குப்பைத் தொட்டிகள், டயர்களை எரித்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் La Courneuve மற்றும் Saint-Denis நகரங்களுக்கிடையே ட்ராம் போக்குவரத்து தடைப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட ஆறுபேரினை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேற்படி தாக்குதலானது Wanys R எனும் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்தே இடம்பெற்றது. கடந்த புதன்கிழமை அன்று ஸ்கூட்டரில் பயணித்த Wanys R இனை La Courneuve நகர காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan