Paristamil Navigation Paristamil advert login

கங்குவா படத்தின் அப்டேட் கொடுத்த சூர்யா..

கங்குவா படத்தின் அப்டேட் கொடுத்த  சூர்யா..

19 பங்குனி 2024 செவ்வாய் 02:12 | பார்வைகள் : 2681


நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சூர்யா, தான் நடித்து வரும் கங்குவா படத்தின் அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

நிகழ்ச்சியில் மாணவர்களை பார்த்து அவர் பேசியதாவது-உங்களை பார்ப்பதில் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. அகரம் அறக்கட்டளை ஆரம்பித்து 15 ஆண்டுகளில் சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டும், படித்து முடித்தும் உள்ளனர். அவர்களில் 70 சதவீதம் பேர் எனது தங்கைகள்.

ஆண்டுதோறும் 70 சதவீத பெண்களுக்கு அகரத்தில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை கொள்கையாகவே வைத்துள்ளோம். கங்குவா படத்திற்காக டப்பிங் தற்போது  பேசி வருகிறேன். அதனால்தான் எனக்கு தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது. கங்குவா படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டது.  என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் கங்குவா திரைப்படம் கோடைக்கு வெளியாகலாம் என்ற உற்சாகத்தில் சூர்யாவின் ரசிகர்கள் உள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா,  திஷா பதானி முன்னணி கேரக்டரில் நடித்துள்ள கங்குவா திரைப்படம் பீரியட் மற்றும் தற்காலத்தில் நடக்கும் காட்சிகளாக படமாக்கப்பட்டு வருகிறது.

கங்குவா படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

சமீபத்தில் வெளியான அனிமல் படத்தின் மூலம் கவனம் பெற்ற பாபி தியோல், கங்குவா படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஒளிப்பதிவு வெற்றி பழனிசாமி. எடிட்டிங் நிஷாத் யூசுப். கங்குவா படத்திற்கான கதையை ஆதி நாராயணாவும், திரைக்கதையை அவருடன் இணைந்து மதன் கார்க்கியும் எழுதியுள்ளனர்.

கங்குவா படத்தில் யோகி பாபு, ஜெகபதி பாபு, நட்டி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த ராஜ், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்