Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்தில் வாழும் ரஷ்யர்களின் ஆதரவு தொடர்பில் வெளியாகிய தகவல்...

சுவிட்சர்லாந்தில் வாழும் ரஷ்யர்களின் ஆதரவு தொடர்பில் வெளியாகிய தகவல்...

19 பங்குனி 2024 செவ்வாய் 09:06 | பார்வைகள் : 6546


ரஷ்யாவில் பொதுத்தேர்தல் முடிந்து மீண்டும் புடின் ஜனாதிபதியாகியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் வாழும் ரஷ்யர்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிந்துகொள்வதற்காக, அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்புகள் சில நகரங்களில் நடத்தப்பட்டன.

அவ்வகையில், ஜெனீவாவிலுள்ள Russian Mission மற்றும் Bernஇலுள்ள ரஷ்ய தூதரகம் ஆகிய இடங்களில் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.

வாக்கெடுப்பில், புடினுக்கு ஆதரவாக ஜெனீவாவில் 20 சதவிகித வாக்குகளும், Bernஇல் 16 சதவிகித வாக்குகளும் கிடைத்தன. 

ரஷ்யாவில் புடினுக்கு 87 சதவிகித வாக்குகள் கிடைத்ததாக கூறப்படும்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் வாழும் ரஷ்யர்களின் ஆதரவு புடினுக்கு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

அதற்கு பதிலாக, அவர்கள் Vladislav Davankovக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். 

அவர் New People party என்னும் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

Vladislav Davankovக்கு Bernஇல் 45 சதவிகித வாக்குகளும், ஜெனீவாவில் 29 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்