Paristamil Navigation Paristamil advert login

இளமையாக இருக்க ஊசிகளை எடுத்துக்கொண்டாரா? உண்மையை உடைத்த முன்னாள் கேப்டன்

இளமையாக இருக்க ஊசிகளை எடுத்துக்கொண்டாரா? உண்மையை உடைத்த முன்னாள் கேப்டன்

19 பங்குனி 2024 செவ்வாய் 09:37 | பார்வைகள் : 2265


அவுஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தன்னைப் பற்றி பரப்பப்படும் பொய்யான செய்திகளை மறுத்துள்ளார்.

இளமையாக இருப்பதற்காக எந்த ஊசியும் எடுக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

'இளமையான தோற்றத்திற்காக நான் Botox அல்லது fillers பயன்படுத்தவில்லை. இது நூற்றுக்கு நூறு உண்மை' என்றார் கிளார்க்.

உண்மையில் நடந்தது என்னவென்றால், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கிளார்க் இளமையாகத் தெரிந்தார்.

கிளார்க்கின் கண்கள் புதிதாகத் தெரிகின்றன என்று The Manse என்ற அறுவை சிகிச்சை அல்லாத அழகுசாதன நிறுவனத்தின் நிறுவனர் Dr Naomi McCullum கருத்து தெரிவித்துள்ளார்.

அதன் மூலம், இளமையாக தோற்றமளிக்க கிளார்க் போடோக்ஸ் மற்றும் ஃபில்லர்களை எடுத்துக்கொண்டார் என்ற செய்தி வைரலானது.

மேலும், இந்த ஊசிகளுக்கு அவர் 2000 அவுஸ்திரேலிய டொலர் செலவு செய்திருப்பார் என்று கூறினார். இந்த செய்தியையடுத்து ரசிகர்கள் பலமாக வாக்குவாதம் செய்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து, தனக்கு எதிராக வரும் பொய்க் கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார். அந்த செய்தி ஒன்றும் உண்மை இல்லை என்று அனைவரின் வாயையும் அடைத்தார்.

அவுஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் கிளார்க் அபாரமான ஆட்டக்காரர். இவரது தலைமையில் அவுஸ்திரேலியா 2015ல் உலக கோப்பையை வென்றது.

அதே ஆண்டு ஆஷஸ் தொடருக்குப் பிறகு அவர் விளையாட்டிலிருந்து விடைபெற்றார். தற்போது, ​​கிளார்க் வர்ணனையாளராகத் தொடர்கிறார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்