கனடாவில் சர்வதேச மாணவர்களின் அவலநிலை
19 பங்குனி 2024 செவ்வாய் 09:52 | பார்வைகள் : 5631
கனேடிய மாகாணமான Saskatchewanஇல்தான் இந்த நிலைமை. கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்கு சமீபத்தில் கனடா கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்நிலையில், Saskatchewanஇல் கல்வி பயிலும் மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் வேலை கிடைப்பது கடினமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவிலிருந்து கல்வி கற்பதற்காக கனடா வந்த ஷிவாங்கி ஷர்மா (25), தான் பட்டப்படிப்பு படிக்கும்போது, தனக்கு மூன்று பகுதி நேர வேலைகள் கிடைத்தது அதிர்ஷ்டம்தான் என்கிறார்.
காரணம், இப்போது படிக்க வரும் மாணவர்களுக்கு, ஒரு, பகுதி நேர வேலை கிடைப்பதே கடினமாக உள்ளது என்கிறார் ஷிவாங்கி.
இப்படிப்பட்ட சூழலில், கனவுகளுடன் Saskatchewanக்கு கல்வி பயில மாணவர்கள் வருவார்களென்றால், அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும் என்கிறார் அவர்.
மற்றொரு சர்வதேச மாணவரான மெஹ்தி (Mehdi Ebrahimpour (35), சமீபத்தில் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டார். ஆனால், தான் படிக்கும்போதுதான் வேலை கிடைப்பது கஷ்டமாக இருந்தது என்றால், இப்போது படித்துமுடித்தபிறகும் வேலை கிடைப்பது கஷ்டமாக உள்ளது என்கிறார் மெஹ்தி.
அதற்குக் காரணம், கனடாவில் வேலை செய்ய, கனேடிய பணி அனுபவம் தேவை.
மெஹ்தி ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். அவர் தன் நாட்டில் பணி செய்த அனுபவத்தை கனடா கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
சிலர், தங்கள் கல்வித் தகுதிக்குக் குறைந்த, வருவாய் குறைந்த வேலைகளைச் செய்து வருவதாக தெரிவிக்கிறார் மெஹ்தி. ஆக, இதற்கு மேலும் Saskatchewanக்கு சர்வதேச மாணவர்கள் வருவார்களென்றால், சரியான வேலை கிடைப்பதில் பெரும் சவால்களை சந்திக்கவேண்டியிருக்கும் என்கிறார் அவர்.
மாணவர்கள் தங்குவதற்கு வாடகைக்கு வீடு கிடைப்பதிலும் பிரச்சினைகள் நிலவுகின்றன.
வீடு பற்றாக்குறை ஒருபக்கம், அதிக வாடகை இன்னொருபக்கம்.
இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஒரு வீட்டின் வாடகை சுமார் 1.360 டொலர்கள்.
இலங்கை மதிப்பில் 3,06,758 ரூபாய்.
அறையில் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு மாணவர்களை தங்கவைக்கும் நிலை ஏற்படுகிறது.
ஆனால், அதற்கேற்றாற்போல கழிவறை குளியலறை போன்ற வசதிகள் வேண்டுமே, ஒரு அறையில் கூட்டமாக அடைத்துவைக்கப்பட நாமொன்றும் ஆடு மாடுகள் இல்லையே என்கிறார் ஷிவாங்கி!