Paristamil Navigation Paristamil advert login

இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!

 இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!

20 பங்குனி 2024 புதன் 16:33 | பார்வைகள் : 10205


நான் என்னுடைய வாழ்க்கையில் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், அதில் ஒன்று இசைஞானி இளையராஜா, இன்னொன்று யார் என்பதை தனுஷ் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘இளையராஜா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியான நிலையில் இது குறித்த விழா ஒன்றில் நடிகர் தனுஷ் பல விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார்.

அதில் ’நான் என்னுடைய வாழ்க்கையில் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஒன்று இசைஞானி இளையராஜா இன்னொன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தெரிவித்தார். இந்த இரண்டில் ஒன்று தற்போது நிறைவேறி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இசைஞானி இளையராஜாவின் இசை தான் எனக்கு துணை. நான் இளையராஜா அவர்களின் ரசிகன், பக்தன், அவருடைய இசை தான் எனக்கு துணையாக இருந்துள்ளது. எனக்கு நடிப்புன்னா என்னன்னு தெரியாத காலத்தில் இருந்து இப்ப வரைக்கும் ஒரு காட்சியை படமாக்கும்போது ஒரு காட்சியை படமாக்க வேண்டும் என்றால் அந்த காட்சிக்கு தகுந்த பாடலை அல்லது பின்னணி இசையை கேட்பேன். அந்த இசை அந்த காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லும், அதை அப்படியே உள்வாங்கி அந்த காட்சியில் நடித்து விடுவேன். வெற்றிமாறன் கூட இதை ஒரு முறை பார்த்திருக்கிறார்.

இப்பவும் ‘இளையராஜா’ படத்தில் நடிப்பது எனக்கு மிகப் பெரிய சேலஞ்ச் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை. இந்த கேரக்டரில் நடிப்பதற்கு எனக்கு அவருடைய இசை துணை நிற்கும்’என்று தனுஷ் பேசினார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்