Essonne : மகிழுந்துக்குள் இருந்து சடலம் மீட்பு! - இரு சகோதரர்கள் கைது!

20 பங்குனி 2024 புதன் 17:22 | பார்வைகள் : 14219
மகிழுந்து ஒன்றுக்குள் இருந்து 30 வயதுடைய ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவரின் இரு சகோதர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Nandy (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. அன்று இரவு கூவர் கொண்ட குழு ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்ற போது, அங்கிருந்து மூவர் தப்பிச் சென்றுள்ளனர். அதேவேளை, சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இரத்தக்கறை இருப்பதையும் பார்த்துள்ளனர்.
அதையடுத்து, அவர்கள் பயணித்த மகிழுந்தை துரத்திச் சென்றனர். அதிகாலை 3.30 மணி அளவில் அவர்களது மகிழுந்து Soisy-sur-Seine (Essonne) நகரில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது. மகிழுந்தின் பின் பெட்டியில் 30 வயதுடைய அவர்களது சகோதரின் சடலம் இருந்துள்ளது.
20 மற்றும் 25 வயதுடைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025