Paristamil Navigation Paristamil advert login

பிரபாஸ் கிருஷ்ணரை அவமதிக்கிறாரா ?கிளம்பியது புது சர்ச்சை!

பிரபாஸ்  கிருஷ்ணரை அவமதிக்கிறாரா ?கிளம்பியது புது சர்ச்சை!

21 பங்குனி 2024 வியாழன் 13:40 | பார்வைகள் : 6071


படப்பிடிப்புத் தளத்தில் தினமும் அசைவம் சாப்பிட்டு கடவுள் கிருஷ்ணரை நடிகை பிரபாஸ் அவமதித்து வருகிறார் என புது சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனை பிரபல பாலிவுட் விமர்சகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

’பாகுபலி’ படம் மூலம் பான் இந்திய ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அதன் பிறகு தொடர்ச்சியாக பான் இந்திய படங்கள் என்ற வட்டத்திற்குள் அவர் சிக்கினார். 'ராதே ஷ்யாம்’, ‘சலார்’, ‘ஆதிபுருஷ்’ எனத் தொடர்ச்சியாக இவரது பான் இந்தியப் படங்கள் தோல்வியை தழுவியது.

இருந்தாலும் இப்போது அடுத்து பான் வேர்ல்டு ஆக்டராக அவதாரம் எடுத்துள்ளார் பிரபாஸ். இப்போது ‘கல்கி 2898 ஏடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இந்தியாவில் மட்டுமல்லாது, ஆங்கிலம் உள்ளிட்ட உலக மொழிகளிலும் வெளியாகிறது எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தை ஒட்டிதான் இப்போது சர்ச்சை எழுந்துள்ளது.

அதாவது, பிரபல பாலிவுட் விமர்சகர் கமல் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘’ஆதிபுருஷ்’ படம் மூலமாக கடவுள் ராமரை கேலிக்கூத்தாக்கினார் பிரபாஸ். இப்போது கிருஷ்ணரின் பத்தாவது அவதாரமான ‘கல்கி 2898 ஏடி’ படம் மூலம் வந்திருக்கிறார். எனக்குக் கிடைத்த தகவலின்படி, கல்கி படப்பிடிப்புத் தளத்தில் பிரபாஸ் தினமும் அசைவம் சாப்பிடுகிறார். விஷ்ணு அவதாரத்தில் நடித்துக் கொண்டே தினமும் இப்படி செய்கிறார். இதை அவர் செய்யக் கூடாது” எனக் கூறியுள்ளார்.

இவரது பதிவை அடுத்து பலரும் கடவுள் கிருஷ்ணரை பிரபாஸ் அவமதித்தார் என இணையத்தில் சர்ச்சைக் கிளப்பி வருகின்றனர். இதற்கு முன்பு பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமராக பிரபாஸின் தோற்றம், ராவணனாக சயிஃப் அலிகானுடைய தோற்றம் இணையத்தில் பயங்கரமாக டிரோல் செய்யப்பட்டது. படத்தின் தோல்விக்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது. இதனாலேயே, பாலிவுட்டில் ரன்பீர் சிங், சாய் பல்லவியை வைத்து இன்னொரு ராமாயணப் படம் உருவாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்