எல்லை மீறும் கூகுள்! - பிரான்சில் தடை?!!
21 பங்குனி 2024 வியாழன் 14:33 | பார்வைகள் : 4997
கூகுள் நிறுவனம் பிரான்சில் ‘எல்லை மீறி’ செயற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விரைவில் கூகுளின் Map செயலிக்கு தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளின் போது ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பரிசுக்கு வருகை தர உள்ளனர். அதையடுத்து, அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்களது Map சேவைகளை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் சில புதிய குறுக்கு வழிகளை, நடை பாதைகள் இல்லாத வீதிகளினை தனது செயலியில் மேம்படுத்தியுள்ளது.
"Transports publics Paris 2024" என தெரிவிக்கப்பட்டு இந்த வழிகளை மேம்படுத்தியுள்ளது. அவை பிரெஞ்சு சாலை விதிகளுக்கு புறம்பானது எனவும், இதனை பயன்படுத்துவதை கூகுள் கைவிடவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த ‘குறுக்குவழி’ சாலைகளினால் வீதி போக்குவரத்து தடைப்படும் எனவும், நெருக்கடிகள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை கூகுள் நிறுவனம் மீளப்பெறாவிடால், கூகுள் Map செயலி பிரான்சில் தடைவிதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்லது.