Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அமெரிக்க டொலர் பெறுமதியில் மாற்றம்!

இலங்கையில் அமெரிக்க டொலர் பெறுமதியில் மாற்றம்!

21 பங்குனி 2024 வியாழன் 14:52 | பார்வைகள் : 2909


நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று(21) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 04 சதமாகவும் விற்பனை பெறுமதி 308 ரூபாய் 80 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபாய் 40 சதம், விற்பனை பெறுமதி 369 ரூபாய் 58 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325 ரூபாய் 83 சதம், விற்பனை பெறுமதி 339 ரூபாய் 20 சதம்

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 335 ரூபாய் 38 சதம், விற்பனை பெறுமதி 351 ரூபாய் 97 சதம்

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபாய் 77 சதம் விற்பனை பெறுமதி 230 ரூபாய் 62 சதம்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபாய் விற்பனை பெறுமதி 206 ரூபாய் 31 சதம்

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 98 சதம், விற்பனை பெறுமதி 2 ரூபாய் 06 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்