Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வெள்ளையர்களுக்கு மாத்திரமான களியாட்ட நிகழ்வு இரத்து

இலங்கையில் வெள்ளையர்களுக்கு மாத்திரமான களியாட்ட நிகழ்வு இரத்து

24 மாசி 2024 சனி 15:36 | பார்வைகள் : 2228


இலங்கையில் ரஷ்ய ஹோட்டல் ஒன்றில் இடம்பெறவிருந்த வெள்ளையர்களிற்கு மாத்திரம் என்ற நிகழ்வு இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்பு காரணமாக இந்த நிகழ்வு இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“வெள்ளை களியாட்ட நிகழ்வு” என அறிவிக்கப்பட்டிருந்த நிகழ்வு அதன் பாரபட்ச தன்மைக்காக கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது.

முகத்தை அடிப்படையாக வைத்தே நிகழ்விற்கு நபர்களை அனுமதிப்பது என ஏற்பட்டாளர்கள் திட்டமிட்டிருந்தனர். 

வெள்ளை நிறத்தவர்களிற்கும் செல்வந்தர்களுக்கும் நடையுடைபாவனையை அடிப்படையாக வைத்தும் அனுமதி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

முகக்கட்டுப்பாடு என்பது பொதுவாக உயர்தர இரவுவிடுதிகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். மேலும் இது தனிநபர்களின் தோற்றம் சமூக அந்தஸ்த்து ஆகிய அகநிலைமதிப்பீடுகளின் அடிப்படையில் அனுமதியை தீர்மானிப்பதை குறிக்கின்றது.

இதேவேளை நிறவெறி குறித்த கரிசனைகள் காரணமாகவே இந்த நிகழ்வு இரத்துசெய்யப்பட்டுள்ளதாக ஏற்பட்டாளர்கள்  இஸ்டாகிராமில் அறிவித்துள்ளனர்.

நிகழ்வின் கருப்பொருளினால் ஏற்பட்ட காயங்களிற்கு மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ள ஏற்பட்டாளர்கள் ரஸ்யன் கபேயில் இன்று நாங்கள் வெள்ளை நிறத்தவர்களிற்கான களியாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தோம் இது நிறவெறி என ஊதிப்பெருப்பிக்கப்பட்ட கருத்தினால் கடும் எதிர்ப்பை சந்தித்தோம் வெள்ளை களியாட்ட நிகழ்வு இரத்துச்செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்