பா.ஜ.,வில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி
24 மாசி 2024 சனி 17:28 | பார்வைகள் : 2535
விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி, டில்லியில் மத்திய இணை அமைச்சர் முருகன் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பா.ஜ.,வில் இணைந்ததாக கூறியுள்ளார்.
விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ., ஆகவும், சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளராகவும் விஜயதாரணி பதவி வகித்தார்.
கட்சியில் கடந்த சில நாட்களாக அதிருப்தியில் இருந்த அவர் பா.ஜ.,வில் இணையப் போவதாக தகவல் வெளியாகின. இதற்காக அவர் டில்லியில் முகாமிட்டு இருந்தார்.
இந்நிலையில், இன்று டில்லியில் பா.ஜ., அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி பா.ஜ.,வில் இணைந்தார்.
இதன் பிறகு விஜயதாரணி நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பா.ஜ.,வில் இணைந்துள்ளேன்.
அண்ணாமலை பாத யாத்திரையால் தமிழக பா.ஜ.,வில் புத்துணர்ச்சி ஏற்பட்டு உள்ளது. மோடி தலைமையில் என்னை போன்ற பெண்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.