கர்ப்பிணிப் பெண்களின் நஞ்சுக்கொடியில் Microplastics
25 மாசி 2024 ஞாயிறு 11:12 | பார்வைகள் : 4315
கர்ப்பிணிப் பெண்களிடம் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் அதிகரிப்பதால் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
நியூ மெக்சிகோ ஹெல்த் சயின்சஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், புதிய சாதனத்தின் மூலம் கர்ப்பிணிப் பெண்களின் நஞ்சுக்கொடியில் மைக்ரோபிளாஸ்டிக் எச்சங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
நச்சுயியல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட விவரங்களின்படி, விஞ்ஞானிகள் 62 கர்ப்பிணிப் பெண்களின் மாதிரிகளை ஆய்வு செய்தபோது, ஒவ்வொரு கிராம் திசுக்களிலும் 6.5 முதல் 790 மைக்ரோகிராம் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இந்த எண்ணிக்கை சிறியதாக தோன்றினாலும், இது ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த பிளாஸ்டிக் துகள்கள் முதலில் நஞ்சுக்கொடியையும் பின்னர் இந்த கிரகத்தில் உள்ள அனைத்து பாலூட்டிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும் என்று ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய மேத்யூ காம்பன் கவலை தெரிவித்தார்.