Paristamil Navigation Paristamil advert login

ஆண்டனி புயல் - பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஆண்டனி புயல் - பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள எச்சரிக்கை

5 ஆவணி 2023 சனி 10:15 | பார்வைகள் : 4705


பிரித்தானியாவை ஆண்டனி புயல்  தாக்கவுள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம்எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நேற்றிரவு, ஆண்டனி புயல் என பெயரிடப்பட்டுள்ள புயல் பிரித்தானியாவைத் தாக்கியது.

இன்றும், அதன் தாக்கத்தால் பலத்த காற்றும் கன மழையும் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வேல்ஸ் மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் ஆம்பர் எச்சரிக்கைகள் விடுத்துள்ளது.

வட அயர்லாந்து மிக கன மழையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட அயர்லாந்துக்கு மழை தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தென்மேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு காற்று தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 65 கிலோமீற்றர் வேகம் வரையில் பலத்த காற்று வீசலாம் என்றும், காற்றில் பறக்கும் பொருட்களால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்