Paristamil Navigation Paristamil advert login

Asnières-sur-Seine : ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்!

Asnières-sur-Seine : ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்!

29 மாசி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 11890


இளம் பெண் ஒருவர் சென் நதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Asnières-sur-Seine (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெப்ரவரி 26, திங்கட்கிழமை முற்பகல் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். Neuilly மேம்பாலத்தில் இருந்து பெண் ஒருவர் ஆற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டு அவர் தேடப்பட்டார்.

கடற்படையினரும் அழைக்கப்பட்டு இரண்டுமணிநேரங்களுக்கும் மேலாக தேடப்பட்டார். பின்னர் 4 கிலோமீற்றர் தொலைவில் நண்பகல் 12 மணி அளவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு ஆற்றில் இருந்து மீட்கப்பட்டார்.

மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதை அடுத்து, பிற்பகல் 3 மணி அளவில் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்