Paristamil Navigation Paristamil advert login

ரொறன்ரோவில் போலி வயகரா மாத்திரை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

ரொறன்ரோவில் போலி வயகரா மாத்திரை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

29 மாசி 2024 வியாழன் 08:08 | பார்வைகள் : 7229


கனடாவின் சுகாதார திணைக்களம் இந்த சட்டவிரோத போலி மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.

ரொறன்ரோவில் பெருந்தொகை போலி வயகரா மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

போலி வயகரா மாத்திரைகளை கொள்வனவு செய்தவர்கள் உடன் அவற்றை பயன்படுத்துவதனை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்காப்ரோவின் எக்லிங்டன் அவன்யூவில் அமைந்துள்ள Daisy Mart மற்றும் நோர்த் யோர்க்கின் ஜேன் வீதியில் அமைந்துள்ள MJ Mini Mart ஆகிய கடைகளில் வயகரா மாத்திரை கொள்வனவு செய்தவர்கள் அவற்றை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போலியான வயகரா மாத்திரைகளே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு நிறுவனங்களிலும் விற்பனை செய்யப்பட்ட வயகரா மாத்திரைகள் உரிய முறையில் பொதியிடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான போலி மருந்து மாத்திரைகளை பயன்படுத்துவதன் மூலம் ஆபத்தான பக்க விளைவுகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்