Paristamil Navigation Paristamil advert login

பங்களாதேஷில் பாயங்கர  தீ விபத்து - 43 பேர் பலி

பங்களாதேஷில் பாயங்கர  தீ விபத்து - 43 பேர் பலி

1 பங்குனி 2024 வெள்ளி 10:02 | பார்வைகள் : 9969


பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஏழு மாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

டாக்காவில் ஏழு மாடி கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் அமைந்துள்ள உணவகத்தில் நேற்றிரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தீ வேகமாக அனைத்து மாடிகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் 22 பேர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சுமார் 35 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தில் சிக்கித் தவித்த 75 பேரை உயிருடன் மீட்ட நிலையில், அதில் 42 பேர் மயக்க நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்