அதர்வாவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்

1 பங்குனி 2024 வெள்ளி 11:23 | பார்வைகள் : 6206
மறைந்த பிரபல நடிகர் முரளி அவர்களுடைய மகனான அதர்வா, கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான "பாணா காத்தாடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல பல படங்களில் நடித்து, சிறந்த நடிகராக விளங்கி வருகின்றார்.
குறிப்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான "பரதேசி" என்கின்ற திரைப்படம், நடிகர் அதர்வாவிற்கு ஒரு நல்ல பெயரை பெற்று கொடுத்தது என்றே கூறலாம். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்காத அவர், தற்பொழுது மீண்டும் திரையுலகில் களமிரங்கியுள்ளார்.
"சிவா மனசுல சக்தி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமான எம். ராஜேஷ், இயக்கத்தில் அந்த புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. பிரபல நடிகை அதிதி சங்கர் இந்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். வருகின்ற கோடை விடுமுறைக்கு இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1