பாலா அடித்தாரா? ’வணங்கான்’ நடிகை கூறிய விளக்கம்..!

1 பங்குனி 2024 வெள்ளி 11:30 | பார்வைகள் : 6874
‘வணங்கான்’ படத்திற்காக நான் கிட்டத்தட்ட ஒரு வருடம் அந்த டீமிடம் பணி புரிந்துள்ளேன். பாலா உள்பட இயக்குனர் டீமில் உள்ள எல்லோரும் என் மீது மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அவர்களுக்கும் எனக்கும் ஒரு நல்ல நட்பு பிணைப்பு இருந்தது.
பாலா சார் எனக்கு அதிக சுதந்திரம் கொடுத்தார், என்னுடைய நடிப்பு நன்றாக வர வேண்டும் என்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வார், அவர் என்னை ஒரு சிறந்த நடிகையாக மாற்ற எடுத்த முயற்சிகள் குறித்தும் அந்த பேட்டியில் நான் நிறைய கூறியுள்ளேன், ஆனால் அதெல்லாம் அந்த பேட்டியில் வரவில்லை.
பாலா சார் படப்பிடிப்பின்போது கொஞ்சம் ஸ்ட்ரிக்டாக இருப்பார் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக வதந்திகளில் கூறியபடி அவர் நடிகர் நடிகைகளை அடிக்க மாட்டார், ஒரு படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக இயக்குனர் ஸ்ட்ரிக்டாக இருப்பதில் தவறு இல்லை, ஆனால் நான் கூறியதை நாம் முழுவதுமாக பேட்டியில் வெளியிடாமல் ஒரு சிறு பகுதியை மட்டும் வெட்டி ஒட்டி தேவையில்லாமல் வதந்தியை பரப்பி உள்ளனர் என்று நடிகை மமிதா பைஜூ விளக்கம் அளித்துள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1