இளையராஜாவின் வாழ்கை வரலாறு படத்தில் நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்?

1 பங்குனி 2024 வெள்ளி 11:40 | பார்வைகள் : 6372
நடிகர் தனுஷ் சமீபகாலமாக நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக 20 கோடியில் இருந்து 30 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்பட்டது. குறிப்பாக அவர் கடைசியாக நடித்திருந்த கேப்டன் மில்லர் படத்திற்காக சம்பளமாக 25 கோடி வரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், தனுஷ் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறாராம்.
அதன்படி, இனிமேல் தனுஷ் தான் நடிக்கும் படங்களுக்கு 50 கோடி சம்பளம் வாங்கலாம் என தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம். தனுஷ் அடுத்ததாக தனது 51-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு பிறகு அவர் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
அந்த திரைப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரண் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. படத்தை இயக்குவதால் அருண் மாதேஸ்வரண் இளையராஜாவுடன் இருந்து அவர் எதிர்கொண்ட சம்பவங்களை பற்றியும் தகவலை சேகரித்து இளையராஜாவின் பயோபிக் படத்தை இயக்குவதற்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் இளையராஜாவாக நடிக்க நடிகர் தனுஷ் சம்பளமாக 50 கோடி கேட்டுள்ளாராம். அது மட்டுமின்றி இனிமேல் அவர் தான் நடிக்கும் படங்களும் அவ்வளவு கோடி சம்பளம் தான் வாங்க முடிவு செய்து இருக்கிறாராம். தனுஷ் 50 கோடி சம்பளம் கேட்டுள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1