அடக்கம் செய்யப்பட்ட அலெக்ஸி நவல்னியின் உடலம்

2 பங்குனி 2024 சனி 11:31 | பார்வைகள் : 8608
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் உடலம் மொஸ்கோவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் கடுமையான விமர்சகரான நவல்னி, தனது 47வது வயதில் அவர் சிறைவைக்கப்பட்டிருந்த தண்டனைக் குடியிருப்பில் கடந்த பெப்ரவரி (10.02.2024) ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்களிடமிருந்து குற்றச்சாட்டுக்கள் எழுப்பியிருந்த நிலையில் ரஷ்ய அரசுக்கு அதில் எந்த தொடர்பும் இல்லை என மறுத்துள்ளது.
இந்நிலையில் அதிகாரிகள், நவல்னியின் இயக்கத்தை தீவிரவாத அமைப்பு எனவும் அவரது ஆதரவாளர்களை அமெரிக்க ஆதரவுடையவர்கள் எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேலும், இறுதி நிகழ்வின்போது, பல நாட்டு தூதுவர்கள் பிரசன்னமாகியிருந்துள்ளனர்.
இதன்போது, நவல்னியின் மரணத்திற்கு காரணமான அதிகாரிகளை மன்னிக்க மாட்டோம் என ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் கோசமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1