Paristamil Navigation Paristamil advert login

கோலிவுட்டில் அறிமுகமாகும் தனுஷ் மகன் யாத்ரா..!

கோலிவுட்டில் அறிமுகமாகும் தனுஷ் மகன் யாத்ரா..!

2 பங்குனி 2024 சனி 11:59 | பார்வைகள் : 6887


தனுஷின் 50 படமான ‘ராயன்’ என்ற படத்தை அவரே இயக்கி முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக தனுஷ் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டார் என்பதும் அவை இணையத்தில் வைரலானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் தான் தனுஷ் தனது மகன் யாத்ராவை அறிமுகம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் மகன் யாத்ராவுக்கு நடிப்பில் விருப்பமில்லை என்பதால் அவரது விருப்பப்படி இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக அவர் அறிமுகமாகியுள்ளார் என்றும் ’ராயன்’ படத்தின் ஒளிப்பதிவாளர் பெயர் இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் தனுஷின் மகன் யாத்ரா தான் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் தனுஷ் மகன் சைலண்ட் ஆக ஒரு படத்தையே முடித்து விட்டதாக கூறப்படும் நிலையில் கோலிவுட் திரையுலகில் இன்னொரு வாரிசு நடிகர் என்ட்ரி ஆகி உள்ளார் என்பது தெரிய வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்