ஜப்பானில் சக்திவாய்ந்த நிலசடுக்கம் - பீதியில் மக்கள்

3 பங்குனி 2024 ஞாயிறு 09:31 | பார்வைகள் : 7949
ஜப்பானில் உள்ள ஹாராவில் நேற்று மாலை 4.49 நிலநடுக்கம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
ஜப்பானின் ஹரா பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர்.
குறிப்பாக நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
மேலும் ஜப்பானில் உள்ள ஷிகோகுவில் கடந்த வாரம் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கமும் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியிருந்தது.
ரிங்க் ஆப் பயர் எனப்படும் புவி தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும்.