Paristamil Navigation Paristamil advert login

இயல்பை விட கூடுதல் வெப்பம்: வானிலை மையம் எச்சரிக்கை

இயல்பை விட கூடுதல் வெப்பம்: வானிலை மையம் எச்சரிக்கை

7 பங்குனி 2024 வியாழன் 15:24 | பார்வைகள் : 5562


தமிழகத்தில் இன்றும் (மார்ச் 07), நாளையும் (மார்ச் 08) ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (மார்ச் 07) முதல் வரும் மார்ச் 13ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் இன்றும் (மார்ச் 07), நாளையும் (மார்ச் 08) ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசவுகரியம் ஏற்படலாம். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்