கொரோனா குமாரில் விஷ்ணு விஷாலா...?
7 பங்குனி 2024 வியாழன் 15:32 | பார்வைகள் : 8599
2021 ல் கோகுல் இயக்கத்தில், கொரோனா குமார் என்ற படத்தில் சிம்பு நடிப்பதாக டைட்டில் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இந்தப் படத்தை தயாரிப்பதாக கூறினர்.
கொரோனா பெருந்தொற்றால் இந்தப் படம் டேக்ஆஃப் ஆகவில்லை. இந்தப் படத்துக்காக தரப்பட்ட முன்பணத்தை சிம்பு திருப்பித் தரவில்லை என்று தயாரிப்பு தரப்பு சார்பில் சிம்பு மீது வழக்குத் தொடரப்பட்டது. தற்போது, கொரோனா குமாரில் ஒருபோதும் நடிப்பதாயில்லை என்ற முடிவுக்கு சிம்பு வந்துள்ளார். அவருக்குப் பதில் விஷ்ணு விஷால் நடிப்பதாக சில தினங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால், அது தவறு என இயக்குநர் கோகுல் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கப்படும் படத்தை கோகுல் இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் நடிக்கிறார். இது கொரோனா குமார் கதையல்ல, முற்றிலும் வேறு கதை என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
கோகுல் ரௌத்திரம் படத்தின் மூலம் இயக்குநரானவர். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மேரா, அன்பிற்கினியாள் உள்பட பல படங்கள் இயக்கியுள்ளார். கடைசியாக அவரது இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் படம் வெளியானது.
கொரோனா குமார் படம் வெளிவருமா, அதன் ஹீரோ யார் என்பது படத்தைத் தயாரிக்கும் வேல்ஸ் நிறுவனத்தின் முடிவுல்தான் உள்ளது
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan