ஹமாஸ் பேச்சுவார்த்தைக் குழுவினர் கெய்ரோவிலிருந்து வெளியேற்றம்
7 பங்குனி 2024 வியாழன் 15:51 | பார்வைகள் : 3634
போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்த ஹமாஸ் இயக்கத்தின் பிரதிநிதிகள் கெய்ரோவிலிருந்து வெளியேறியுள்ளனர் என எகிப்திய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளன ர்.
காஸாவில் இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்துவது குறித்து கத்தார், எகிப்து ஏற்பாட்டில், எகிப்திய தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்கைள் நடைபெற்றுவந்தன.
இந்நிலையில், ஹமாஸ் பிரதிநிதிகள் கெய்ரோவிலிருந்து வெளியேறியுள்ளனர் என எகிப்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆலோசனைகளுக்காக ஹமாஸ் பிரதிநிதிகள் கெய்ரோவிலிருந்து வெளியேறியுள்ளனர். எனினும் அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் என எகிப்திய அரசாங்க வட்டாரமொன்று தெரிவித்ததாக எகிப்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, உடன்பாடொன்று ஏற்படும்வரை பேச்சுவார்த்தை தொடரும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
உடன்பாடொன்றை ஏற்படுத்துவதற்கு மத்தியஸ்தர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் இஸ்ரேல் தடுத்துவிட்டது என ஹமாஸ் பிரதிநிதி சமி அபு ஸுஹ்ரி கூறியுள்ளார்.