அச்சுறுத்தல் விடுக்கும் இரஷ்யா! - மோல்டோவா நாட்டுக்கு ஆதரவு வழங்கும் பிரான்ஸ்!
7 பங்குனி 2024 வியாழன் 16:00 | பார்வைகள் : 6055
உக்ரேனுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பணியை இரஷ்யா மேற்கொண்டு வருகிறது. அதில் தற்போது உக்ரேனுக்கு அருகே உள்ள சிறிய ஐரோப்பிய நாடானா மோல்டோவா (Moldova) சிக்கிக்கொண்டுள்ளது.
மோல்டோவா நாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பிரான்ஸ் வழங்கும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதியளித்துள்ளார். மோல்டோவாவுக்கு ‘அசைக்க முடியாத ஆரதவு’ வழங்க பிரான்ஸ் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை காலை எலிசே மாளிகைக்கு மோல்டோவா நாட்டின் ஜனாதிபதி Maia Sandu வருகை தந்திருந்தார். இருவரும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்கள்.
மோல்டோவின் மேற்கு எல்லைகளில் இரஷ்யா தனது இராணுவ துருப்புக்களை நிறுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 1,500 இராணுவ வீரர்கள் அங்கு நிலைகொண்டுள்ளனர். அவர்களை திரும்ப பெறவேண்டும் என மோல்டோவா வலியுறுத்தியுள்ளது. அதையடுத்து அங்கு கட்ந்த ஒருவாரமாக பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.