Paristamil Navigation Paristamil advert login

பரிசில் இருந்து 400 அகதிகள் வெளியேற்றம்!

பரிசில் இருந்து 400  அகதிகள் வெளியேற்றம்!

7 பங்குனி 2024 வியாழன் 18:36 | பார்வைகள் : 10475


ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு, பரிசில் உள்ள அனைத்து அகதிகளையும் வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 

இதுவரை பல நூறு அகதிகள் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், நேற்று புதன்கிழமை காலி 400 அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சென் நதியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து, வெள்ள அபாயம் இருப்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக சென் நதிக்கரைகளில் தங்கியிருந்த 400 வரையான அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  

மேம்பாலத்தின் கீழே சிறிய கூடாரங்களை அமைத்து அகதிகள் படுத்துறங்கும் நிலையில், அவர்களை Utopia56 எனும் அமைப்புடன் இணைந்து காவல்துறையினர் நேற்று புதன்கிழமை காலை வெளியேற்றினர். 

அவர்கள் இல் து பிரான்சின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்