Paristamil Navigation Paristamil advert login

தபால் ஓட்டு சேகரிப்பு பணி துவக்கம் நேரடியாக ஓட்டளிக்கவே பலர் ஆர்வம்

தபால் ஓட்டு சேகரிப்பு பணி துவக்கம் நேரடியாக ஓட்டளிக்கவே பலர் ஆர்வம்

9 சித்திரை 2024 செவ்வாய் 01:05 | பார்வைகள் : 2632


ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், 85 வயதிற்கு மேற்பட்டோர், வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டு போடுவது நேற்று துவங்கியது.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஸ்ரீ பெரும்புதுார் தொகுதியில், 85 வயதை தாண்டியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் ஓட்டு சேகரிக்கும் பணி நேற்று துவங்கியது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களின் வீடுகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்று, தபால் ஓட்டுகளை சேகரிக்கின்றனர். ஸ்ரீ பெரும்புதுார் தொகுதியில் தாம்பரம், பல்லாவரம், ஆலந்துார், ஸ்ரீ பெரும்புதுார், மதுரவாயல், அம்பத்துார் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 75,997 பேர். பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து, 97,060 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 429 பேர் என, மொத்தம்- 23 லட்சத்து 73,486 பேர் உள்ளனர். இவர்களில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எண்ணிக்கை 7,810 மற்றும் 85 வயது நிரம்பிய வாக்காளர்கள் எண்ணிக்கை 24,654.

தபால் ஓட்டு சேகரிக்கும் பணியானது, நேற்று முதல், 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வீடுகளுக்கே சென்று ஓட்டுகள் பெற ஏதுவாக, நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு குழுவிலும்,ஒரு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஒரு உதவி ஓட்டுச்சாவடி அலுவலர், ஒரு நுண்பார்வையாளர், ஒரு போலீஸ்காரர் மற்றும் புகைப்பட கலைஞர் ஆகியோர் இருப்பர்.

தபால் ஓட்டு போட விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் பெற்று, அதை பூர்த்தி செய்து வழங்காதவர்கள், ஏப்., 19ம் தேதி ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டு போடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


நேரடியாக ஓட்டளிக்க ஆர்வம்


தென்சென்னை தொகுதியில், 20 லட்சத்து 7,816 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 40,000 பேர், 85 வயதிற்கு மேற்பட்டோர், 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள்.

இவர்களில், 85 வயதிற்கு மேற்பட்டோரில், 2,133 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 132 பேர், தபால் ஓட்டு போட விருப்பம் தெரிவித்திருந்தனர். இந்தத் தொகுதியிலும், நேற்று முதல் தபால் ஓட்டு போடும் பணி துவங்கியது.

தினமும் ஐந்து குழுவாக பிரித்து வீடு வீடாக அனுப்பி, மூன்று நாட்களில் தபால் ஓட்டு போடும் பணியை முடிக்க, தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த தொகுதியை பொறுத்தமட்டில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இடையே தபால் ஓட்டு போட ஆர்வம் குறைந்துள்ளது. பெரும்பாலானோர் நேரடியாக ஓட்டுச்சாவடியில் வந்து ஓட்டுப் போடவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மத்திய சென்னை தொகுதி, அண்ணா நகரில் 34 மாற்றுத்திறனாளி உட்பட 536 பேரும் வில்லிவாக்கத்தில் 32 மாற்றுத்திறனாளி உட்பட261 பேரும், தபால் ஓட்டுக்கு விண்ணப்பம் பெற்றுள்ளனர்.


பார்வையிட்டார்


முதற்கட்டமாக அனைத்து பகுதிகளிலும் நேற்று, தபால் ஓட்டும் பணி துவங்கியது. அண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட கியூ பிளாக், 16வது தெருவில் மூதாட்டி ஒருவர் தன் தபால் ஓட்டை பதிவு செய்தார். அதை, மத்தியசென்னை தேர்தல் நடத்தும்அலுவலர் பிரவீன்குமார், நேரடியாக சென்று பார்வையிட்டார்.

மத்திய சென்னை தொகுதி, அண்ணா நகரில்34 மாற்றுத்திறனாளி உட்பட 536 பேரும், வில்லிவாக்கத்தில் 32 மாற்றுத்திறனாளி உட்பட 261 பேரும், தபால் ஓட்டுக்கு விண்ணப்பம் பெற்றுள்ளனர்.

முதற்கட்டமாக அனைத்துபகுதிகளிலும் நேற்று, தபால் ஓட்டு போடும் பணி துவங்கியது. அண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட கியூ பிளாக், 16வது தெருவில் மூதாட்டி ஒருவர் தன் தபால் ஓட்டை பதிவுசெய்தார்.

அதை, மத்திய சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் குமார் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்