Paristamil Navigation Paristamil advert login

சிறுவன் எமிலியின் மேலும் சில எலும்புகள் கண்டுபிடிப்பு!

சிறுவன் எமிலியின் மேலும் சில எலும்புகள் கண்டுபிடிப்பு!

9 சித்திரை 2024 செவ்வாய் 05:51 | பார்வைகள் : 3619


கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர்  காணாமல் போன சிறுவன் எமிலியின் எலும்புக் கூடுகள் மற்றும் மண்டையோடு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நேற்று திங்கட்கிழமை மேலும் சில எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Haut-Vernet மலைக்கிராமம் மற்றும் அதைச் சூழ உள்ள பகுதிகளில் கடந்த வாரத்தில் இருந்து தொடர் தேடுதல் பணி இடம்பெற்று வருகிறது. சிறுவனின் ஆடைகளும் அப்பகுதியில் இதுந்து கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அதேபகுதியில் இருந்து (ஆடைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகே) மேலும் சில எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உடனடியாக அவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, கிடைக்கப்பெற்ற அனைத்து ஆதாரங்களும் எமிலியினுடையது என்பது உறுதிப்படுத்தப்பட்ட போதும், சிறுவனுக்கு உண்மையில் நடந்தது என்ன என்பது தொடர்பில் அறியமுடியாது உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டு விலங்குகள் தாக்கியிருக்க கூடும் எனவும், இராட்சத கழுகு தூக்கிக்கொண்டு சென்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்