ஒலிம்பிக் : பாதுகாப்பு வலையங்களைக் கடக்க QR அவசியம்!

9 சித்திரை 2024 செவ்வாய் 08:21 | பார்வைகள் : 7331
ஒலிம்பிக் போட்டிகளின் போது சில பாதுகாப்பு வலையங்களூடாக பயணிக்க QR குறியீடு அவசியம் என உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.
இந்த நடைமுறை உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே அவசியம் எனவும், வெளிநாட்டவர்களுக்கு அது அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Trocadéro அல்லது Champ-de-Mars உள்ளிட்ட (கீழே உள்ள புகைப்படத்தைப் பார்க்கவும். நன்றி le parisien) பகுதிகளில் பயணிக்க வேண்டிய தேவை உங்களுக்கு இருக்குமாயின் உங்களுக்கு கட்டாயம் ஒரு QR குறியீடு தேவை. அது இருந்தால் மட்டுமே நீங்கள் அப்பகுதிக்குள் நுழைய முடியும். இது இலவசம் என்றபோதும் மிகவும் கட்டாயமானதாகும்.
இந்த QR குறியீடினை வரும் மே மாதம் 10 ஆம் திகதி முதல் உள்துறை அமைச்சகத்தின் இணையத்தளமூடாக பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேற்படி பகுதிகளில் நீங்கள் பணிபுரிபவர் அல்லது, நிறுவனத்தை வைத்திருப்பவர்கள், அங்கு வசிப்பவர்கள், அல்லது விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளவர்கள் என யாராக இருந்தாலும் இந்த QR அவசியமானதாகும் என உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.