Paristamil Navigation Paristamil advert login

ஆரவுக்கு அஜித் கொடுத்த மிகப்பெரிய பரிசு..

ஆரவுக்கு அஜித் கொடுத்த மிகப்பெரிய பரிசு..

9 சித்திரை 2024 செவ்வாய் 10:52 | பார்வைகள் : 5995


நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் தெரிந்தது.

இந்நிலையில் அஜித்துடன் இந்த படத்தில் பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் கூட அஜித், ஆரவ் ஆகிய இருவரும் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பின்போது காரில் சென்று கொண்டிருந்த போது அந்த கார் விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் பைக் பிரியரான அஜித், நடிகர் ஆரவ்வுக்கு 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக் ஒன்றை பரிசளித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் ஆரவ்வுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நடிகர் அஜித், உலகம் முழுவதும் பைக் சுற்றுப்பயணம் செய்யும் திட்டத்தை வைத்திருக்கும் நிலையில் அதன் ஒரு பகுதியை முடித்துவிட்ட அவர், அடுத்த பகுதியை ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ படங்களை முடித்த பிறகு செல்ல உள்ளார்

அஜித்தின் பைக் குழுவினர்களில் ஒருவராக ஆரவ் இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அஜித் இடம் இருந்து அவருக்கு இன்ப அதிர்ச்சியாக ரூபாய் 35 ரூபாய் மதிப்புள்ள பைக் கிடைத்தது உண்மையில் அவருக்கு மிகப்பெரிய பெருமையே.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்