'இந்தியன்' நாயகியை சந்தித்த ஷங்கர்..

9 சித்திரை 2024 செவ்வாய் 13:29 | பார்வைகள் : 8593
ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘இந்தியன்’ திரைப்படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தின் நாயகியை அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மனிஷா கொய்ராலா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ’இந்தியன்’. கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் நாயகி ஆக நடித்த மனிஷா கொய்ராலாவை இயக்குனர் ஷங்கர் மும்பையில் தற்போது சந்தித்துள்ள புகைப்படம் மனிஷா கொய்ராலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.
இந்த பதிவில் மனிஷா கொய்ராலா எமோஷனலாக ’நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷங்கர் அவர்களை மும்பையில் சந்தித்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது சந்திப்பு எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்றும் குறிப்பிட்டுள்ளார். மனிஷா கொய்ராலாவின் இந்த எமோஷனல் பாதிப்பு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
இயக்குனர் ஷங்கர் தனது மகள் திருமணத்திற்காக பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வரும் நிலையில் மனிஷா கொய்ராலாவுக்கு மறக்காமல் அழைப்பிதழ் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ‘இந்தியன்’ படத்தை அடுத்து கடந்த 1999 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய 'முதல்வன்’ படத்திலும் மனிஷா கொய்ராலா நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1