Paristamil Navigation Paristamil advert login

போதையில்லா நகரங்கள் - தொடரும் காவற்துறையின் தீவிர நடவடிக்கை!!

போதையில்லா நகரங்கள் - தொடரும் காவற்துறையின் தீவிர நடவடிக்கை!!

9 சித்திரை 2024 செவ்வாய் 20:23 | பார்வைகள் : 3659


பிரான்சில் போதையில்லாத நகரங்களை உருவாக்கும் தீவிர நடவடிக்கையான «Pடயஉந நெவவந ஓஓடு» மிகவும் தீவிரமாக பல நாட்களாகப் பெரும் நகரங்கள் பலவற்றில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

காவற்துறையினர், ஜோந்தார்மினர், அதிரடிப்படையினர் என பல படையணிகளை இணைத்துப் பாரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதன் முறையாக இந்த நடவடிக்கையின் பெறுபேறுகள் பற்றி பிரான்சின் நீதியமைச்சர் செனட் சபையில் தெரிவித்துள்ளார்.

«கடந்த மூன்று வாரங்களாக மிகத் தீவிரமாக நடைபெறும்  «Place nette XXL»  நடவடிக்கையில் பல மில்லியன் பணம், மற்றும் பெருமளாவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் 365 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளனர். இதில் பாதிப் பேரிற்கும் மேல் உடனடியாகத் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்»

«எமது இளைஞர்கள் பலர் மிகச் சுலபமாகப் பணம் பார்ப்பதற்காக இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்»

«இவர்களிற்கான குழு மோதலில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டில் பறக்கும் ரவைகளால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பலர் காயமடைந்தும் சாவடைந்தும் உள்ளனர். இது மார்செய் நகரில் பெருமளவில் நடைபெற்றுள்ளது»

«போதை விநியோகத்தால் பொதுமக்கள் பெரும் பெரும் ஆபத்தையும் அசசத்தையும் அடைகின்றார்கள்»

«எனது போதைக்கெதிரான போராட்டம், உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனமன் உடன் இணைந்து, பாரிய அளவில் நடைபெறுகின்றது. இது பெரும் சுத்திகரிப்பு நடவடிக்கையாக அமைந்துள்ளது»

எனவும் பிரான்சின் நீதியமைச்சர் எரிக்-துபோன் மொரெத்தி (Eric Dupond-Moretti) செனட் சபையில் தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்