Paristamil Navigation Paristamil advert login

புத்தகம் வாசிப்பதை விட நான்கு மடங்கு அதிகமாக தொலைபேசி பயன்படுத்தும் இளைஞர்கள்!

புத்தகம் வாசிப்பதை விட நான்கு மடங்கு அதிகமாக தொலைபேசி பயன்படுத்தும் இளைஞர்கள்!

10 சித்திரை 2024 புதன் 07:00 | பார்வைகள் : 3737


பிரெஞ்சு இளைஞர்கள் நாள் ஒன்றுக்கு 19 நிமிடங்கள் புத்தகம் வாசிக்கின்றார்கள். நாள் ஒன்றில் தொலைபேசி பார்வையிடும் நேரத்தை விட இது நான்கு மடங்கு குறைவாகும்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது. பல்வேறு வயது பிரிவுகளில், பல்வேறு நகரங்களில், பல ஆயிரம் மாணவர்களை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது.

குறிப்பாக 16 தொடக்கம் 19 வயதுக்குட்பட்டவர்களே அதிகளவு தொலைபேசி பயன்படுத்துவதாகவும், அவர்கள் நாள் ஒன்றுக்கு 5 மணிநேரத்துக்கும் அதிகமாக தொலைபேசி பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாள் ஒன்றுக்கு 3.11 மணிநேரங்கள் சராசரியாக தொலைபேசி பயன்படுத்துகிறார்கள்.

ஏழு தொடக்கம் ஒன்பது வயதுக்குட்பட்டவர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 மணிநேரமும் 50 நிமிடங்களும் தொலைபேசியை பார்வையிடுகின்றனர். ஆனால் அவர்கள் நாள் ஒன்றுக்கு 24 நிமிடங்கள் மட்டுமே புத்தகம் வாசிக்கின்றனர்.

பிரான்சில் பிள்ளை ஒருவர் சராசரியாக அவரது ஒன்பதாவது வயதில் தொலைபேசி ஒன்றை சொந்தமாக பெறுகிறார் எனவும் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்