கொழும்பில் கோடீஸ்வர வர்த்தகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

10 சித்திரை 2024 புதன் 03:36 | பார்வைகள் : 13968
அதுருகிரிய, கல்வருசாவ வீதியில் உள்ள கோடீஸ்வர ஆடை வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றின் மீது நபர் ஒருவர் நேற்று மாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வர்த்தகருக்கு சொந்தமான வீட்டின் முன் மலர்வளையம் வைக்கப்பட்ட சம்பவத்தில், சந்தேகநபர்கள் மூவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
வெளிநாட்டில் இருக்கும் பாதாள உலக செயற்பாட்டாளர், குறித்த வர்த்தகரிடம் பல தடவைகள் கப்பம் கோரியுள்ளதாகவும், பணத்தை தர மறுத்ததன் காரணமாக அவரை அச்சுறுத்தியிருக்கலாம் எனவும் சந்தேகம் இருப்பதாக நவகமுவ பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மஹரகம பமுன்வ பிரதேசத்தில் பாரிய ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வரும் இந்த கோடீஸ்வர வர்த்தகர் மேலும் பல ஆடைத் தொழிற்சாலைகளை வைத்திருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1