Paristamil Navigation Paristamil advert login

கனடா சென்றடைந்தார் பிரதமர் கேப்ரியல் அத்தால்!

கனடா சென்றடைந்தார் பிரதமர் கேப்ரியல் அத்தால்!

11 சித்திரை 2024 வியாழன் 06:00 | பார்வைகள் : 2976


பிரதமர் கேப்ரியல் அத்தால் சற்று முன்னர் கனடாவைச் சென்றடைந்தார். இரண்டு நாட்கள் அரச சுற்றுப்பயணமாக அவர் அங்கு சென்றுள்ளார்.

Ottawa விமான நிலையத்தை சென்றடைந்த அவரை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ (Justin Trudeau) வரவேற்றார். பிரான்சின் நீண்டகால ‘பங்காளிகள்’ என குறிப்பிடப்படும் கனடாவுடன், நட்பை வலுப்படுத்த இந்த பயணம் அமைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கேப்ரியல் அத்தால் பிரதமராக பொறுப்பேற்றதன் பின்னர், முதன்முறையாக ஐரோப்பா அல்லாத ஒரு நாட்டுக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ளார். அதேவேளை, பிரெஞ்சு தரப்பில் கனடாவுக்கு அரச பயணம் மேற்கொள்ளுவது ஆறு வருடங்களின் பின்னர் இடம்பெறுகிறது. முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் G7 மாநாட்டுக்காக கனடாவின் Quebec நகருக்கு பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்