Paristamil Navigation Paristamil advert login

நடிகை டாப்சி ரகசியமாக திருமணம் செய்தது ஏன்?

நடிகை டாப்சி  ரகசியமாக திருமணம் செய்தது ஏன்?

11 சித்திரை 2024 வியாழன் 10:00 | பார்வைகள் : 4313


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் டாப்சி என்பதும் இவர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த மத்தியாஸ் போ என்பவரை கடந்த மாதம் 23ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தை அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பதும் பத்திரிகையாளர் சினிமாக்காரர்கள் உட்பட யாருக்கும் அழைப்பு கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் ஒரு சில திருமண வீடியோக்கள் மட்டுமே இணையத்தில் கசிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது திருமணம் ரகசியமாக நடத்தப்பட்டது ஏன் என்பது குறித்து டாப்சி விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் சொல்ல வேண்டுமா என்பது குறித்து நான் யோசித்தேன். அதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல, ஆனால் என்னுடைய திருமணத்தை பொது விஷயமாக நான் மாற்ற விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் திருமணத்தை பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் என்பதை குறித்து நான் மனதளவில் தயாராகவில்லை என்றும் அது பொது வெளியில் எப்படி உள்வாங்கிக் கொள்ளப்படும் என்பது குறித்து நான் கவலைப்பட்டேன் என்றும், அதனால் தான் எதையும் பொது வெளியில் அறிவிக்க வேண்டும் என நினைக்கவில்லை என்று கூறினார். இருப்பினும் என்னுடைய நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள் என்று டாப்சி கூறினார்.

டாப்சியின் இந்த பதிலுக்கு கருத்து தெரிவித்த நெட்டிசன்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட காமெடி நடிகரின் மகள் அனைத்து திருமண வீடியோக்களையும் காசுக்கு விற்பனை செய்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய நடிகையான டாப்சி மிக எளிமையாக திருமணம் நடத்தி உள்ளதை ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்