Paristamil Navigation Paristamil advert login

கிளிநொச்சியில் இரண்டு பிள்ளை தந்தை சடலமாக மீட்பு

கிளிநொச்சியில் இரண்டு பிள்ளை தந்தை சடலமாக மீட்பு

12 சித்திரை 2024 வெள்ளி 05:57 | பார்வைகள் : 4543


இரண்டு பிள்ளை தந்தை நீர்ப்பாசன வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பரந்தன் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்காலில் இவ்வாறு குறித்த நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிசாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியை சேர்ந்த  பெனடிற் பெனிஸ் நிமலன் எனும் 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக  விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்