நீரிலிருந்து எரிபொருள்., சாதித்து காட்டிய பில் கேட்ஸ் ஆதரவு நிறுவனம்
12 சித்திரை 2024 வெள்ளி 06:40 | பார்வைகள் : 1894
கலிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட இன்பினியம் (Infinium) நிறுவனம் உலகின் முதல் மின்-எரிபொருள் (e-fuel) உற்பத்தியாளராக மாற உள்ளது.
கார்பன் டை ஆக்சைடைப் பயன்படுத்தி தொழில்துறை அளவிலான எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகிறது.
Bloomberg-ன் அறிக்கையின்படி, நிறுவனத்தின் டெக்சாஸை தளமாகக் கொண்ட Corpus Christi ஆலை, அத்தகைய எரிபொருளின் தொழில்துறை அளவிலான உற்பத்தியை கருத்தாக்கத்திலிருந்து யதார்த்தத்திற்கு எடுத்துச் செல்லும் உலகின் முதல் ஆலையாகும்.
காற்றாலை மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி தண்ணீரை ஹைட்ரஜனாகவும், ஆக்ஸிஜனாகவும் மாற்றும் தொழில்நுட்பம் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
இதில் ஹைட்ரஜன் அணுஉலைக்கு அனுப்பப்படுகிறது. அங்கு அது CO2 (கார்பன் டை ஆக்சைடு) உடன் இணைகிறது. பின்னர் அது புதைபடிவ எரிபொருளைப் போன்ற பண்புகளைக் கொண்ட செயற்கை எரிபொருளாக மாறும்.
அறிக்கையின்படி, இன்பினியம் சுமார் 8,300 லிட்டர் e-fuel அல்லது electrofuel -ஐ உற்பத்தி செய்து அமெரிக்கா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும்.
மைக்ரோசாப்ட் (Mirosoft) நிறுவனர் Bill Gates, இந்த இன்பினியம் நிறுவனத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போதுள்ள எஞ்சின்களுக்கு இந்த எரிபொருளைப் பயன்படுத்தலாம் என்பது இன்பினியத்தின் தனித்துவம் என்று பில் கேட்ஸ் கூறுகிறார்.
இது லொறிகள், கப்பல்கள் மற்றும் விமானங்களில் கூட பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.