Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகும் ஈரான் - அதிர்ச்சியில் உலக நாடுகள்

இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகும் ஈரான் - அதிர்ச்சியில் உலக நாடுகள்

12 சித்திரை 2024 வெள்ளி 11:45 | பார்வைகள் : 3742


இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்த உத்தரவாதங்களை வழங்கிவரும் அதேவேளை அமெரிக்கா ஈரான் பதில் தாக்குதலை மேற்கொள்வதை தடுப்பதற்கான தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என வோசிங்டனில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை மத்தியகிழக்கில் பாரிய போர்வெடிப்பதை   தடுப்பதற்கான முயற்சிகளிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த சில நாட்களில் இஸ்ரேலிற்கு எதிராக ஈரான் ஆளில்லா விமான தாக்குதலை அல்லதுஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக உறுதியாக  அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்

சிரியதலைநகரில் உள்ள தனது துணைதூதரகத்தின் மீது இஸ்ரேல்  ஏப்பிரல் முதலாம் திகதி மேற்கொண்ட  தாக்குதலிற்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் தாக்குதலை மேற்கொண்டால் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்தி பதில் தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேல் கோடிட்டுக்காட்டியுள்ளது.

இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள டெல்நொவ் விமானதளத்தில் அமெரிக்க எவ்15 போர் விமானங்களின் முன்னாள் நின்றபடி இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு யார் எங்களுக்கு தீங்கிழைத்தாலும் நாங்கள் அவர்களிற்கு தீங்குவிழைவிப்போம் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் அனைத்து பாதுகாப்பு தேவைகளையும் பூர்த்தி செய்ய நாங்கள் தயார் பாதுகாப்பு மற்றும் தற்பாதுகாப்பு வழிமுறைகள் மூலம் இதனை உறுதி செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் இராஜாங்க செயலாளரின் இஸ்ரேலிற்கு வலுவான ஆதரவை தெரிவிக்கும் செய்திகள் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்வதை தடுக்ககூடும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.

ஈரான் இஸ்ரேலின் இலக்குகளை தாக்கினால் அது மிக நீண்டகால யுத்தமொன்றை ஆரம்பித்துவைக்கும் இதுவரை இஸ்ரேல் ஈரான் இடையிலான மோதல்கள் ஒரு மறைமுக யுத்தமாகவே காணப்பட்டன.

மோதல்கள் தீவிரமடைவது எவரினது நலனிற்கும் உகந்த விடயமல்ல ஈரான் தாக்குதலை மேற்கொள்வதை தடுத்து நிறுத்தவேண்டும் என அன்டனி பிளிங்கென் துருக்கி சீன சவுதிஅரேபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஈரான் தாக்குதலை மேற்கொண்டால் அமெரிக்காவின் மிகவும் உறுதியான ஆதரவு இஸ்ரேலிற்கு கிடைக்கும் என ஜோபைடன் உறுதியளித்துள்ள அதேவேளை இஸ்ரேலிற்கு ஆதரவளிப்பதற்காக அன்டனி பிளிங்கென் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரை தொடர்புகொண்டுள்ளார்.

ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டால் மோதல் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடிப்பதையும்  பிராந்தியத்தில் அமெரிக்காவின் படையினரை குறிப்பிடத்தக்க அளவிற்கு பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படுவதையும் உறுதி செய்வதற்காக இஸ்ரேல் நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அமெரிக்கா கேட்டுக்கொள்ளும்.

எனினும் ஈரானின் தாக்குதல் காரணமாக இஸ்ரேலிற்கு குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டால் கடுமையான பதில் தாக்குதலை மேற்கொள்வதற்கான உரிமை இஸ்ரேலிற்கு உள்ளது என பைடன் நிர்வாகம் கருதுகின்றது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்