Paristamil Navigation Paristamil advert login

ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறாரா மோகன்?

ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறாரா மோகன்?

12 சித்திரை 2024 வெள்ளி 14:00 | பார்வைகள் : 1587


நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹரா என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் மோகன். அதோடு, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் கோட் படத்தில் அவர் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் விஜய் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171 வது படத்திலும் மோகன் வில்லனாக நடிப்பதாக ஒரு செய்தி வைரலாகி வந்தது.

ஆனால் இது குறித்து மோகன் தரப்பை விசாரித்த போது, ரஜினி படத்தில் நடிப்பது குறித்து இதுவரை யாரும் அணுகவில்லை. அப்படி அழைப்பு வந்தால் கண்டிப்பாக சொல்கிறேன் என்றார் மோகன். அதனால் ரஜினி 171 வது படத்தில் மோகன் நடிப்பதாக வெளியாகி உள்ள செய்தி வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்