Paristamil Navigation Paristamil advert login

412,000 சர்வதேச மாணவர்களை வரவேற்றுள்ள பிரான்ஸ்!!

412,000 சர்வதேச மாணவர்களை வரவேற்றுள்ள பிரான்ஸ்!!

13 சித்திரை 2024 சனி 11:43 | பார்வைகள் : 3743


பிரான்சில் சரவதேச மாணவர்களை வரவேற்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்ற கல்வி ஆண்டில் (2022/2023) மொத்தமாக 412,087 வெளிநாட்டு மாணவர்கள் பிரான்சுக்கு வரவேற்கப்பட்டுள்ளனர்.

முந்தைய 2021/2022 கல்வி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3% சதவீதம் அதிகமாகும். அதேவேளை, கடந்த ஐந்து ஆண்டுகளில் 17% சதவீதம் அதிகமாகும். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முன்னதாக, '2027 ஆம் ஆண்டுக்குள் 500,000 வெளிநாட்டு மாணவர்களை இணைக்கும்' திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார். அதற்கு பிரெஞ்சு மொழி அவசியம் இல்லை என்றும், அனைத்து சர்வதேச வகுப்புகளையும் ஆங்கிலமூடாக பிரான்சில் கற்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டு மாணவர்களில் பெரும்பான்மையானோட வட அமெரிக்கா, ஆபிரிக்கா, சீனா மற்றும் ஏனைய ஆசிய நாடுகள் போன்றவற்றில் இருந்து வருகை தந்தவர்களாவர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்