தயாராகிறது... Cannes திரைப்பட விழா 2024!!

13 சித்திரை 2024 சனி 12:03 | பார்வைகள் : 9565
சர்வதேச திரைப்படங்களுக்கான அங்கீகாரமான Cannes திரைப்பட விழாவின் 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.
இவ்வருடம் மே மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த நிகழ்வு 12 நாட்கள் இடம்பெற்று மே 25 ஆம் திகதி வரை இடம்பெற உள்ளது. 77 ஆவது திரைப்பட ஆண்டாக இந்த நிகழ்வு இவ்வருடம் இடம்பெற உள்ளது.
அமெரிக்காவின் பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகையுமான Greta Gerwig இவ்வருடத்துக்கான பிரதான நடுவராக கடமையாற்றுகின்றார்.
அதேவேளை, பிரெஞ்சு திரைப்பட நடிகை Camille Cottin இந்த நிகழ்வினை தொகுத்து வழங்குகிறார்.
முந்தைய வருடங்களைப் போல இவ்வருடமும் பல சர்வதேச திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. 14 ஆம் திகதி முதலாவது திரைப்படமாக 'Le Deuxième Acte’ பிரெஞ்சுத் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதேவேளை, இந்த திரைப்பட விழாவில் பல இந்திய திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1