Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்து தாக்குதல் - நால்வர் பலி

13 சித்திரை 2024 சனி 13:49 | பார்வைகள் : 2295

அவுஸ்திரேலியாவில் வணிகவளாகமொன்றில் நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திகுத்து தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிட்னியின் பொன்டி ஜங்சன் எனப்படும் பகுதியில் இந்த வன்முறை சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

வணிகவளாகமொன்றிற்குள் நபர் ஒருவர் கத்தியுடன் காணப்படுவதாக பொதுமக்களை எச்சரித்துள்ள காவல்துறையினர் பாரிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அந்த பகுதியிலிருந்து பொதுமக்கள் தப்பிவெளியேறியவண்ணமுள்ளனர்.

அவசரசேவை பிரிவினரின் வாகனங்கள் அந்த பகுதிக்கு விரைகின்றன.

பலர் கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

தாக்குதலை மேற்கொண்ட நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்

இதேவேளை இந்த தாக்குதலில் மேலும் சிலர் தொடர்புபட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள காவல்துறையினர் மற்றுமொரு சந்தேகநபரை தேடிவருகின்றனர்

வெஸ்;ட்பீல்ட் வணிகவளாகத்தில் ஆண் ஒருவர் கத்தியுடன் ஓடி திரிந்து தாக்குதலை மேற்கொண்டார் காயமடைந்தவர்களில் குழந்தையொன்றும் தாயும் உள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வணிகவளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஜேசன் என்ற நபர் பெரிய வாளுடன் நபர் ஒருவரை பார்த்ததாகவும் அவர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

வணிகவளாகம் மூடப்பட்டுள்ளது பாதுகாப்பாக பதுங்கியிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்