Paristamil Navigation Paristamil advert login

மணிக்கு 180 கி.மீ வேகத்தில் மகிழுந்து செலுத்திய 15 வயதுச் சிறுவன் கைது!

மணிக்கு 180 கி.மீ வேகத்தில் மகிழுந்து செலுத்திய 15 வயதுச் சிறுவன் கைது!

14 சித்திரை 2024 ஞாயிறு 14:29 | பார்வைகள் : 6491


15 வயதுடைய சிறுவன் ஒருவன், 180 கி.மீ வேகத்தில் மகிழுந்தை செலுத்திய நிலையில், ஜொந்தாமினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 13 ஆம் திகதி, நேற்று சனிக்கிழமை இச்சம்பவம் Eure நகரில் இடம்பெற்றுள்ளது. A13 நெடுஞ்சாலையில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ஜொந்தாமினர், மின்னல் வேகத்தில் பயணித்த மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்தினர். குறித்த மகிழுந்து 90 கி.மீ வேகம் உள்ள குறித்த சாலையில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பயணித்துள்ளது.

மகிழுந்தை தடுத்து நிறுத்திய காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மகிழுந்தைச் செலுத்தியது 15 வயதுடைய சிறுவன் ஒருவர் என தெரியவந்துள்ளது. உடனடியாக அவர் கைதுசெய்யப்பட்டார்.

19 வயதுடைய பெண் ஒருவரும் மகிழுந்துக்குள் இருந்துள்ளார். குறித்த மகிழுந்து அப்பெண்ணினுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்