செயற்கைக்கோள் மூலம் மொபைல் தகவல் தொடர்பு - விஞ்ஞானிகள் வெற்றி
15 சித்திரை 2024 திங்கள் 07:18 | பார்வைகள் : 1474
மொபைல் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக்கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
செல்போன் கோபுரங்கள் இல்லாமல் செல்போன்களில் பேசலாம் என்று கூறப்படுகிறது.
சீனாவால் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்ட 'Tiantong -1' வரிசை செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மூன்றை எட்டியுள்ளது
இது ஆசியா-பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள் இணைப்புக்கு வழி வகுத்துள்ளது.
செயற்கைக்கோள் இணைப்பை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்களை கொண்டு வரும் உலகின் முதல் நிறுவனமாக Huawei ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
Xiaomi, Honor மற்றும் Oppo ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சமீபத்தில் இந்த பட்டியலில் இணைந்துள்ளன.
நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது 'செயற்கைக்கோள் இணைப்பு' முக்கிய பங்கு வகிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
"மொபைல் போன்களுக்கான நேரடி செயற்கைக்கோள் இணைப்பு மிகவும் பிரபலமாகிவிடும்" என்று விஞ்ஞானி குய் வான்சாவோ கூறினார்.