120 ஆண்டுகால வரலாற்றில் முதல் சாம்பியன் - 1,000 கணக்கான ரசிகர்களின் செயல்
16 சித்திரை 2024 செவ்வாய் 07:42 | பார்வைகள் : 1682
பண்டஸ்லிகா இறுதிப் போட்டியில் பாயர் லெவர்குசென் அணி வெற்றி பெற்று, 120 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் ஆனது.
பண்டஸ்லிகா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி BayArena மைதானத்தில் நடந்தது. இதில் பாயர் லெவர்குசென் மற்றும் வெர்டெர் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் விக்டர் போனிபேஸ் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். அதன் பின்னர் க்ரானித் ஸாகா 60வது நிமிடத்தில், தனது அணிக்காக இரண்டாவது கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து, மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிளோரியன் விர்ட்ஸ் (Florian Wirtz) ஹாட்ரிக் கோல் (68, 83, 90வது நிமிடம்) அடித்தார்.
ஆனால் வெர்டெர் (Werder) அணி இறுதிவரை ஒரு கோல் கூட அடிக்காததால், பாயர் லெவர்குசென் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 120 ஆண்டுகால பண்டஸ்லிகா வரலாற்றில் முதல் முறையாக பாயர் லெவர்குசென் அணி சாம்பியன் பட்டதை வென்று சாதனை படைத்துள்ளது.
லெவர்குசென் அணி வெற்றி பெற்றபோது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் இறங்கி வீரர்களை சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.